எகிப்து: எகிப்து நடிகர் அகமது மசார் உருவாக்கிய பிரம்மாண்ட தோட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமா? 4,000 அரிய தாவரங்கள் பற்றி க்யூ.ஆர். கோடு உருவாக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டை சேர்ந்த மறைந்த நடிகர் அகமது மசார் உருவாக்கிய மசார் தோட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான கிசாவில் அமைந்துள்ள மசார் தோட்டத்தில் 4 ஆயிரம் அரிய வகை தாவரங்கள் உள்ளதாக மசாரின் மகன் ஷெஹாப் தெரிவித்தார்.
தாவரவியல் வல்லுநர்கள் குழு கண்காணிப்பில் உள்ள அசார் தோட்டத்திற்கு வருபவர்கள் தாங்கள் பார்க்கும் இனங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள QR குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நூலகத்தில் அவற்றைப் பற்றிய அரிய நூல்கள் டிஜிட்டல் வடிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஷெஹாப் தெரிவித்தார்.