திருமலை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாம்பள்ளி கண்காட்சியில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதால் ஏராளமானோர் குடும்பத்துடன் கண்காட்சிக்கு வந்திருந்தனர். இந்நிலையில் இரட்டை ராட்டினத்தில் ஏராளமானோர் ஏறி அமர்ந்தனர். சில நிமிடங்கள் அப்படியே தலைகீழாக மாறி மீண்டும் கீழே வந்து தேரில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிலிர்ப்பை அளித்தது.
மீண்டும் மேலே சென்று மீண்டும் தலைகீழாக மாறியபோது தொழில்நுட்பக் கோளாறால் நின்றது. இதனால், அதில் அமர்ந்திருந்தவர்கள் உயிருக்கு பயந்து அலறினர். உடனே கீழே இருந்த அவர்களது உறவினர்கள் கூச்சலிட்டனர். அதன்பின்னர் சிறப்புக் குழுவினர் இயந்திரத்தை ஆய்வு செய்து தொழில்நுட்பக் கோளாறை சரி செய்தனர். இது 20 நிமிடங்கள் எடுத்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.