ராஜஸ்தான்: பிச்சை எடுத்த பணத்தில் ஐபோன் வாங்கியதாக பிச்சைக்காரர் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிச்சைக்காரர் ஒருவர் ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 ஐ வாங்கியதாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்பிள் நுண்ணறிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வைத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய பிச்சைக்காரர், “இந்த ஐபோன் 16 ஐ நான் மொத்தமாக ரொக்கப்பணம் கொடுத்து வாங்கினேன்” என்று தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில், ‘ஒருவர் பிச்சைக்காரரிடம் எப்படி இந்த ஐபோனை வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு அவர் பிச்சை எடுத்ததில் கிடைத்தது’ என்று தெரிவித்தார்.
அதே சமயம் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருதரப்பினர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.