இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், தற்போது வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை உச்சத்தை எட்டியுள்ளது. செவ்வாய்கிழமையில், 21 ஜனவரி அன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் 7,450 ரூபாய்க்கும், ஒரு சவரன் 59,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், 22 ஜனவரி அன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் எகிறியது. இது வரலாற்றில் முதல் முறையாக ரூ.60,000-ஐ தாண்டியது. இன்று ஒரு கிராம் 75 ரூபாய்க்கு அதிகரித்து 7,525 ரூபாய்க்கும், ஒரு சவரன் 600 ரூபாய்க்கு அதிகரித்து 60,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று, ஒரு கிராம் 65 ரூபாய்க்கு அதிகரித்து 6,205 ரூபாய்க்கும், ஒரு சவரன் 520 ரூபாய்க்கு அதிகரித்து 49,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் 104 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,04,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.