நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘திரு மாணிக்கம்’. சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படம் கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இது ஒரு அற்புதமான படைப்பு. படம் முடிந்த பிறகும் படத்தின் ஆழமும் உணர்வுகளும் நம்மை விட்டு அகலவில்லை. இயக்குனர் நந்தா பெரியசாமிக்கு தமிழ் திரையுலகில் சிறப்பான எதிர்காலம் உள்ளது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் ஜன.24-ம் தேதி வெளியாகிறது.