வாஷிங்டன்: பிறப்புரிமை குடியுரிமை குறித்த டிரம்பின் நிர்வாக உத்தரவை அமல்படுத்த அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் கோஹ்னூர் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20 அன்று அமெரிக்க அதிபராக பதவியேற்றார். தனது முதல் நாளில், பிறப்புரிமை குடியுரிமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன் படி, ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமை வழங்கப்படாது.’
இதற்கிடையில், பிறப்புரிமை குடியுரிமை குறித்த டிரம்பின் நிர்வாக உத்தரவை அமல்படுத்த அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் கோஹ்னூர் தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். ‘இது எனக்கு தொந்தரவாக இருக்கிறது, இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என்று அவர் கூறினார்.
பிறப்புரிமை குடியுரிமையை தடை செய்யும் டிரம்பின் உத்தரவு பிப்ரவரி 19 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதால், அதற்கு முன்னர் பல கர்ப்பிணிப் பெண்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வது குறித்து ஆலோசனை பெற மருத்துவமனைகளுக்குச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.