டெல்லி: அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண் குழந்தைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று, பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், அவர்களுக்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் பெண் குழந்தைகளின் சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. அவர்களின் சாதனைகள் நம் அனைவரையும் ஊக்கப்படுத்துகின்றன.
பெண் குழந்தைகளை மேம்படுத்துவதில் பங்களித்த கல்வி, தொழில்நுட்பம், திறன்கள், சுகாதாரம் போன்ற துறைகளில் எங்கள் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. பெண் குழந்தைகளுக்கு எந்த பாகுபாடும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதில் நாங்கள் சமமாக உறுதியுடன் இருக்கிறோம். அவர் பதிவிட்டுள்ளார்.