புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என்றும், மேலும் 2 புதிய வரி வகைகள் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தனிநபர் வருமான வரி விலக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் ஒவ்வொரு முறையும் மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த வரவு செலவுத் திட்டங்களில் தனிநபர் வருமான வரி விலக்கு அதிகரித்து வருவதாகத் தோன்றினாலும், அது ஒரு சில குழுக்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது. 2023-24 பட்ஜெட்டில் வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலையான வரி விலக்குகளுடன் கணக்கிட்டால், 7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
இருப்பினும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சில குழுக்களுக்கு மட்டுமே இந்த நன்மை கிடைக்கும். இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சம் ஆக அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, ஆண்டு வருமானம் 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் என்று புதிய வரி வரம்பு 25 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று தெரிகிறது. தற்போதுள்ள தனிநபர் வருமான வரி வரம்புப்படி, ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்துக்கு-க்கு மேல் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும்.
அதேபோல், 80சி வரி விலக்கின் கீழ் பெறும் பலன் ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் இருந்து அதிகரிக்கும் எனத் தெரிகிறது. பிரிவு 80D இன் கீழ் காப்பீட்டு பிரீமியம் மூலம் பெறப்படும் வரி விலக்கு ரூ. 25,000 முதல் ரூ. 50,000, மற்றும் 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வருமான வரம்பில் உள்ளவர்களுக்கு வரி குறைப்பு அறிவிப்பு வெளியிடப்படும். இது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்ஜெட்டில் வருமான வரிச் சலுகைக்கான பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.