புதுடில்லி : மத்திய பட்ஜெட், பிப்., 1-ல், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பாரம்பரிய முறையில் அல்வா தயாரிக்கும் பணியை மேற்கொண்டார்.
ஹல்வா பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்பாக பரிமாறப்படுகிறது. நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதித்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் விழாவில் கலந்து கொண்டனர்.