இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோயால் கடந்த ஜனவரி 25-ம் தேதி இலங்கையில் காலமானார். அவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் இளையராஜா கூறியிருப்பதாவது, பவதாரிணி எங்களை விட்டு பிரிந்த பிறகுதான் அந்த குழந்தை எவ்வளவு அன்பானவர் என்பதை உணர்ந்தேன்.
காரணம், எனது முழு கவனமும் இசையில் இருந்ததால் என் குழந்தைகளை நான் கவனிக்காமல் விட்டுவிட்டது, அது இப்போது எனக்கு வேதனை அளிக்கிறது. இந்த வலி மனிதர்களை ஆறுதல்படுத்தும் இசை என்று நினைக்கும் போது அது எனக்கும் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. பவதாரிணியின் பிறந்த நாள் பிப்ரவரி 12-ம் தேதி அவளுடைய திதி வருகிறது.
நினைவு நிகழ்வாக இரண்டையும் இணைத்து யோசித்து வருகிறேன். இதில் இசையமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என் மகள் பவதாரிணியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என இளையராஜா கூறியுள்ளார்.