தென் கொரியாவின் கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு சில நொடிகள் முன்னர் தீப்பிடித்ததையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது. கிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில், ஹாங்காங்கிற்கு புறப்படவிருந்த ஒரு விமானம் 169 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் என மொத்தம் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்தது. புறப்படுவதற்குக் கிளம்பி சில நிமிடங்களில், விமானம் தீப்பிடித்தது. தீக் கரும்புகை வெளியேறியதால், பயணிகள் பெரும் பீதி அடைந்தனர்.
இதன்போது, விமானம் மீது அவசரமாக மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, எஸ்கேப் ஸ்லைடு மூலம் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மீட்பு பணியில் மூன்று பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது, ஆனால் விமானி தீப்பிடிக்க முன் செய்த துரித நடவடிக்கையால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைப் போலவே, கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும்போது லேண்டிங் கியர் செயலிழந்ததில் 179 பேர் உயிரிழந்தனர்.