சென்னை: கல்வி உரிமையை பாதுகாக்க தமிழக அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கல்வி உரிமையை பாதுகாக்க அரசு பாடுபட்டுக்கொண்டிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “எல்லோருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று நபிகள் சொன்னார்கள். அதைத்தான் திமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்ட மக்களுடைய கல்வி உரிமையை பாதுகாக்கத்தான் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.