ஜப்பான் : ஜப்பான் கடற்பகுதியில் பறந்த ரஷ்ய போர் விமானங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில், ‘டுபோலேவ்-95’ என்ற ரஷ்ய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானங்கள் வானில் வட்டமிட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் ரஷ்ய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.