பீகார்: மத்திய அரசின் பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய பலன் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள பட்ஜெட்டால் நடுத்தர வர்க்கத்தினர் மிகப்பெரிய பலன் அடைவர் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.
மேலும் அவர், மத்திய பட்ஜெட் நேர்மறையானது, வரவேற்கத்தக்கது. பட்ஜெட்டில் பீகாருக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும்” என்றார்.