காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமமுக சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தலைவர் டிடிவி.தினகரன் அளித்த பேட்டி:- சீமான் கோபத்தில் பேசுவதாகவும், மற்றவர்களை மதிக்காமல் பேசுவதாகவும் முதலில் நினைத்தேன். ஆனால் சீமானின் அடிப்படையே தவறானது. சீமான் விடுதலைப்புலிகளை தனது சுயநலத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
புலிகள் அவரை பேச்சாளராக அழைத்தனர். ஆனால் அவர் அதை தனது சொந்த லாபத்திற்காக பயன்படுத்தினார். விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி அளிக்க தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? சீமான் தன்னை ஒரு கொள்கைப் போராளி, புரட்சியாளர் என்று சித்தரிப்பது எல்லாம் வெறும் ஏமாற்று வேலை. மோசடி அம்பலமாகியுள்ளது. அனைவரும் தலைவராக ஏற்றுக் கொண்ட சமூக நீதிப் போராளி பெரியார் பற்றியும் பேசுகிறார். அவரை நம்பி ஏமாந்தவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.