சமீபகாலமாக உணவின் தரம் குறித்து பல பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில், ரயில்வே ஸ்டேஷன் கேன்டீனில் உள்ள பப்களில் எலி ஒன்று ஊர்ந்து செல்லும் வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், உணவுப் பொருட்களின் தரம் குறித்து பல கேள்விகளை எழுப்பும் பல சம்பவங்கள் உள்ளன. சமீபத்தில் பிரபல நிறுவனம் ஒன்றின் ஐஸ்கிரீமில் மனித விரல் சிக்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல், ஐஆர்சிடிசியில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருளான குளோப் ஜாமூனில் கரப்பான் பூச்சி இருந்த வீடியோவும் வைரலானது.
அந்த வகையில் மற்றொரு வீடியோ வைரலாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே கேன்டீனில் சிக்கன் பப்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் எலி ஒன்று ஏறி சுற்றித் திரிகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் விற்பனையாளர் அந்த உணவுகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதையும் நம்பி சாப்பாடு வாங்க முடியாது என பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.