விக் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ் மற்றும் ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 12-வது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் டி.குகேஷ், நெதர்லாந்து வீரர் ஜோர்டன் வான் பாரஸ்டுடன் டிரா செய்தார்.
அதே சமயம் பிரக்ஞானந்தா செர்பிய வீராங்கனை அலெக்ஸி சரனை வீழ்த்தினார். 12-வது சுற்று முடிவில் குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாடோரோவை வீழ்த்தினார். சேலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, துருக்கியின் எடிஸ் குரேலிடம் தோல்வியடைந்தார்.