சென்னை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்து, கடந்த சனிக்கிழமை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக எம்பிக்கள் பலர் பட்ஜெட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.
தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலங்களுக்கு அதிகப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி இழைத்த மத்திய அரசைக் கண்டித்து பிப்., 8-ல் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக, எஸ்.எஸ்.ஏ., திட்டங்களில், அநியாயமாக நிதி பகிர்ந்தளிக்கும், மோடி அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும், பிப்ரவரி, 8-ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பலமுறை கோரிக்கை விடுத்தும், பேரிடர் மேலாண்மைக்கு நிதி ஒதுக்கவில்லை, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட குறிப்பிடவில்லை.