சென்னை: களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இந்நிலையில், அக்கட்சி தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தை படைத்திடும் போராட்டத்தில் 2ம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தவெக.
இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார். தவெக கட்சி அலுவலகத்தில் நேற்று தலைவர்கள் சிலைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து கட்சி கொடியேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.