சென்னை: கேரளாவில் அமீபா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அமீபாவால் மூளையில் தொற்று ஏற்பட்டு கடந்த சில நாட்களில் கேரளாவில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் பியோலி பகுதியில் மேலும் ஒரு சிறுவனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது எக்ஸ் இணையதள பதிவில் கூறியிருப்பதாவது:கேரளாவில் பரவி வரும் அமீபா பாக்டீரியாவால் மூளை பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கவலை அளிக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் இது போன்ற நோய் தாக்குதல்கள் ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இந்த நுண்ணுயிரி, அசுத்தமான நீர் மூலம் பரவுகிறது, குழந்தைகளை பாதிக்க அதிக ஆபத்து உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதல்வர் கவனம் செலுத்தி மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.