இந்தியா ஒரு உற்பத்தி நாடாக மாறுவதால், அதன் கப்பல் அமைப்பை மேம்படுத்துவதுடன், குறைந்த விலை இயக்க முறைமை இருப்பது கட்டாயமாகும். இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள இந்திய பிரதமர், அண்டை நாடுகளுக்கு முதன்முறையாக அரசுமுறை பயணம் மேற்கிறார்.
நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மேம்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்ற பிறகு அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார்.
சென்னை- விளாடிவோஸ்டாக் கடல் சரக்கு வழித்தடத்தை மேம்படுத்தி செயல்படுத்த இரு நாடுகளும் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கை இந்தப் பயணத்தின் மிக முக்கியமான அம்சமாகும். மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் சர்வதேச வர்த்தகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக சென்னை – விளாடிவோஸ்டாக் இடையே 10,300 கி.மீ., தூரம் கொண்ட கடல் மார்க்கத்தை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பாதையானது கிழக்கு ரஷ்யாவின் முக்கிய துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கை இந்தியாவின் தென்கிழக்கு துறைமுக மையமான சென்னையுடன் இணைக்கும். இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்தின் கீழ் இந்த கடல்சார் சரக்கு போக்குவரத்து செயல்படுத்தப்பட உள்ளது.