மதுரை : திருப்பரங்குன்றத்தில் இன்று நாலாம் தேதி இந்து முன்னணி சார்பில் அறப்போராட்டம் நடக்கிறது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, இந்து முன்னணி சார்பில் இன்று (பிப்.4) அறப்போராட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்க உள்ளது.
இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை ஆட்சியர் சங்கீதா பிறப்பித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.