உத்திரபிரதேசம் : மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் சம்பவம் குறித்து சமாஜ்வாதி எம். பி. குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.
உத்திரப்பிரதேசம், மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 29ம் தேதி புனித நீராட சென்ற குவிந்த பக்தர்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேசிய சமாஜ்வாதி எம். பி. ஜெயா பச்சன், “கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
இதனால், ஆற்று தண்ணீர் மாசுபட்டு உள்ளது. அங்கு மக்களுக்கான எந்த சிறப்பு வசதியும் தயார் செய்யப்படவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கும்பமேளாவில் கடந்த 1ம் தேதி மட்டும் ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடி உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.