டேராடூன்: உத்தரபிரதேச மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், நேற்று ஆடவர் பளு தூக்குதல் +109 கிலோ பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ருத்ரமயன் 355 கிலோ (ஸ்னாட்ச் 175+ கினீன் அண்ட் ஜெர்க் 355) தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்னாட்ச் பிரிவில் தேசிய சாதனை படைத்தார். ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்தார். மற்றொரு தமிழக வீரர் அபய் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் ராதிகா சீலன் மற்றும் பூஜா ஆர்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றனர். 37 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், நேற்றைய நிலவரப்படி, 9 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் தமிழகம் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.