கொழும்பு: கதிர்காமம் பகுதியில் உள்ள கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகள் திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்து அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்
இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்து வரப்பட்டன.
இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்
இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து அழைத்துவரப்பட்ட யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.