தனது 50-வது படம் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என சிம்பு உறுதியாக கூறியுள்ளார். சிம்பு தனது 50-வது படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். படம் குறித்து சிம்பு கூறுகையில், “எனது 50-வது படத்திற்கான ப்ரோமோ ஷூட் அடுத்த மாதம் தொடங்கும். அதனால்தான் நானும் அதே படகில் இருக்கிறேன். நல்லபடியாக அமைந்தால் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
அதன் பட்ஜெட் மிகப் பெரியது. இப்போது ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்பனை குறைந்துள்ளது அதனால்தான் நானே தயாரிப்பாளராக ஆனேன். இது பாகுபலி போன்ற படம் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும். அதன் குழுவினர் இதுவரை யாருடனும் ஒப்பந்தம் கூட செய்யவில்லை. இதிலிருந்தே அவர்கள் தமிழ் சினிமாவை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்.
இந்தப் படம் நம் திரையுலகில் என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. சரியில்லை என்றால் என்ன செய்வது என்று யோசிக்கவில்லை. இந்தப் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நான் சினிமாவில் இத்தனை வருஷம் இருக்கேன், இதுக்காக ஏதாவது செய்யணும்னு ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சேன்.
இது என் கடமை. எனது ரசிகர்களுக்காக மட்டுமல்லாது அனைத்து ரசிகர்களுக்காகவும் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன்” என்று சிம்பு தெரிவித்துள்ளார். சிம்புவின் 50-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைக்கிறார். இதனை சிம்பு தயாரிக்கவுள்ளார்.