சென்னை: இஸ்ரோ வெட்லாண்ட்ஸ் அட்லஸ் 2021 பட்டியலில் உள்ள நீர்நிலை எல்லைகளை வரையறை செய்து அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3-வது காலநிலை மாநாட்டை (TN Climate Summit 3.0) முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு சதுப்பு நில இயக்கமும் இதில் ஒரு அங்கம். தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையம் (TNSWA) அமைக்கப்பட்டு 6 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகியும், 2017 விதிகளின்படி தமிழகத்தில் ஒரு சதுப்பு நிலம் கூட அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் முதலமைச்சர் பின்வரும் வாக்குறுதிகளை வழங்க வேண்டும்.
11.12.2024 தேதியிட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ‘இஸ்ரோ வெட்லாண்ட்ஸ் அட்லஸ் 2021-ல் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உள்ள 26,883 நீர்நிலைகளின் சதுப்பு நில எல்லைகளை நிர்ணயம் செய்து, அவற்றை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’. அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் உடனடியாக வரையறுக்கப்படும்.
தமிழகத்தின் அனைத்து சதுப்பு நிலங்களும் 2017 விதிகளின் கீழ் உடனடியாக அறிவிக்கப்படும். ராம்சர் மாநாட்டின் ராம்சர் வெட்லாண்ட்ஸ் நகர அங்கீகாரத்தில் சென்னை நகரத்தை சேர்க்க தமிழக அரசு பரிந்துரைக்கும்.