சென்னையில் இன்று, வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள தொழில் முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் துவக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வை, மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா துவக்கி வைக்கிறார்.
கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதில், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தொழில் முதலீட்டிற்கு சாத்தியமான துறைகள் பற்றிய விளக்க காட்சிகள் காணப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில், வேளாண் உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு, எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், கல்வி மற்றும் திறன்மேம்பாடு, சுகாதாரம், ஜவுளி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகிய முக்கிய துறைகளில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கலாம், ஏனெனில் இக்கண்காட்சி முதல் முதலீட்டாளர்களை இந்தப் பகுதிகளுக்கு வரவழைக்க உதவும்.