புதுடில்லி: செல்போன் தயாரிப்பில் இந்தியாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக அளவிலான செல்போன் தயாரிப்பில் இந்தியா 2வது இடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ம் ஆண்டு நாட்டில் 2 செல்போன் தயாரிப்பு மையங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்போது 300 தயாரிப்பு மையங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 32.5 கோடி முதல் 33 கோடி செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் செல்போன்கள் என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2ம் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.