புதுடில்லி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை ஹர்திக் பாண்டியா பாராட்டி தள்ளியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த விராட் கோலி, இந்திய அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.
கடும் சிரமத்துக்கு மத்தியில் எதிர் அணியின் முதுகுத்தண்டை உடைப்பதில் விராட் கோலி வல்லவர்”. இவ்வாறு விராட்கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார் அவர்.