குமரி: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று (பிப்.7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: – வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.