சென்னை: 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராமின் அடுத்த படமான ‘பறந்து போ’ படத்தின் முதல் பிரத்யேக பார்வை திரையிடப்பட்டது. ‘பறந்து போ’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புக்கு பர்ஸ்ட் லுக் சாட்சி. ரோட்டர்டாமில் உறையும் குளிரையும் பொருட்படுத்தாமல் அரங்கம் நிரம்பியிருந்தது, படத்தின் முடிவில் இடியுடன் கூடிய கைதட்டல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்திருப்பதை உறுதிப்படுத்தியது.

இயக்குநர் ராமுடன் நடிகர் சிவா, டிஸ்னி ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைவர் பிரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் திரையிடலில் கலந்து கொண்டனர். நகைச்சுவையை மையமாக வைத்து எளிமையான கதையில் உருவாகியுள்ள ‘பறந்து போ’ கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.