தனுஷ்கோடியில் உள்ள உணவகங்களில் சமைக்கப்படும் மீன்கள், அப்பகுதியிலேயே கரைவலை மீன்பிடிப்பில் பிடிக்கப்படும் பிரஷ்ஷான மீன்கள். சுற்றுப்புறத்தில் எந்தவொரு கழிவும் கலக்காத மன்னார் வளைகுடா கடலில் உள்ள பவளப்பாறைகளுடன் வாழும் இந்த மீன்கள், தனிச்சுவையாக மற்ற பகுதி மீன்களை விட நன்றாக இருக்கும். இவற்றின் சுவை, ருசி எல்லாம் சிறந்ததாக இருக்கும். அந்த தனுஷ்கோடி ஸ்டைலில் வீட்டிலேயே சுவையுமிக்க மீன் பொரித்து சாப்பிடுவது எப்படி என பார்க்கலாம்.

பொதுவாக, இந்த வற்றியுள்ள மீன்களை சமைக்கும்போது, ஒரு கிலோ மீன், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகாய் தூள், 4 டீஸ்பூன் மசாலா பொடி, 2 டீஸ்பூன் மசாலா பொடி, வறுத்த சோம்பு, 10 வெள்ளைப்பூண்டு பற்கள், தேவைக்கேற்ப உப்பு, ஜாதிக்காய் மற்றும் கடல்பாசிகள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் வறுத்த சோம்பு மற்றும் பூண்டினை சேர்த்து அரைத்து, அனைத்து மசாலாவையும் சேர்த்து, மீனின் மேல் நன்றாக தடவி ஒரு அரை மணி நேரத்திற்கு உலர வைக்க வேண்டும்.
உலரவிட்ட பின், தோசைக்கல்லில் போதுமான அளவு எண்ணெய் ஊற்றி, கல் காய்ந்தவுடன், மிதமான சூட்டில் மசாலா கலந்த மீனை 10 நிமிடங்கள் வரை நன்றாகப் பொரித்து எடுத்தால், சுவையுமிக்க மணமிக்க பொரித்த மீன் தயார் ஆகும். வீட்டில் இதைத் தயாரித்து, தனுஷ்கோடி ஸ்டைலாக சுவையை அனுபவிக்க முடியும்.
இந்த சுவையான மீன் பொறியை வீட்டில் செய்வதன் மூலம், தனுஷ்கோடியின் உணவு ரசனையை வீட்டில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு பெறலாம்.