சென்னை: அடர்த்தியாக முடியை வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது. ஆனால் ஒரு கைப்பிடி அளவு முடியை வளர்ப்பது என்பதே மிகவும் சிரமம். இயற்கையாக முடி வளர்ச்சி அதிகமாக இருப்பவர்களுக்கு, முடி உதிர்ந்தாலும், சீக்கிரம் உதிர்ந்த இடத்தில் முடி வளர்ந்து விடும்.
ஆனால் பிறந்ததிலிருந்தே முடி வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கிறது, என்பவர்களுக்கு முடியை வளர செய்வதில் ஒரு சில சிரமங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, கூடவே இந்த ஹேர் பேக் முயற்சி செய்யும்போது நிச்சயமாக நல்ல முடி வளர்ச்சியை காணலாம்.
பிறந்ததிலிருந்து உங்களுக்கு முடி மெலிசாக தான் இருக்கிறது என்றாலும், ஒரு சில நாட்களில் அதை அடர்த்தியாக மாற்றலாம். நீங்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். கூடவே இந்த ஹேர் பேக்கையும் முயற்சி செய்து பாருங்கள். ஒரு சிறிய துண்டு கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் நிறத்தில் வெளிவரக்கூடிய பாலை மட்டும் சுத்தமாக கழுவி விடுங்கள்.
கற்றாழையில் இரண்டு பக்கம் இருக்கக்கூடிய முல்லை நீக்கிவிடுங்கள். மேலே பச்சை நிற தோளோடு அந்த கற்றாழைகளை துண்டு துண்டாக நறுக்கி ஒரு முறை தண்ணீரில் கழுவி, மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு இரண்டு கைப்பிடி கருவாப்பிலை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து விடுங்கள். இதை அப்படியே ஹேர் பேக்காக போடலாம்.
உங்களுக்கு தலையில் திப்பி திப்பியாக ஒட்டி பிடிக்கும் என்றால் இந்த சாறை மட்டும் வடிகட்டியும் ஹேர் பேக்காக பயன்படுத்தலாம். அரைத்த இந்த ஹேர் பேக் கோடு ஒரே 1 விட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல்லை மட்டும் சேர்த்து, நன்றாக கலந்து தலையில் ஹர்பாக் போட வேண்டும் ஸ்கேல்பில் படும்படி இந்த ஹேர் பேக் போட்டுவிட்டு, முடியின் நுனி வரை இந்த ஹேர் பேக் போட்டுவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்புவை வைத்து அலசி விட வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை போட்டு வர உங்களுடைய முடி திக்காக அடர்த்தியாக வலிமையாக வளர தொடங்கும். ஸ்கேல்பில் நிறைய இடைவெளி இருக்கும் அல்லவா. ஒரு முடிக்கு பக்கத்தில் இன்னொரு முடி அதிக இடைவெளியோடு இருப்பதால்தான் அடர்த்தி குறைவாக இருக்கும். அந்த இடைவெளியை குறைத்து நெருக்க நெருக்கமாக அடர்த்தியான முடி வளர்ச்சியை தூண்டும். சக்தி இந்த ஹேர் பேக்குக்கு உண்டு ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ஹேர்பேக் கொஞ்சம் குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய ஹேர் பேக் தான். உங்களுக்கு தலை பாரம் ஏற்படும் என்றால் வாரத்தில் 1 நாள், 10 நிமிடங்கள் மட்டும் இந்த பேக்கை போடலாம். போட்டுட்டு தலையை அலசிய பின்பு தலையை ஈரம் இல்லாமல் உடனடியாக காய வைத்து விடுங்கள். கூடவே பயோட்டின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.