நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த பழக்கம் உண்டு. அதாவது அவர்களுக்கு ஒரு சில ராசியானவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதாக இருந்தாலும் அவர்கள் கையால் கொடுத்து வாங்கி செய்வார்கள். அதே போல் பணவரவு அதிகமாக இருக்க வேண்டும் என்றாலும் அவர்களிடம் இருந்து முதலாக ஒரு ரூபாயாவது பெற்று அதன் பிறகு எதையும் ஆரம்பிப்பார்கள். இதைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.
இதற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் நாம் தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும். இதை பார்ப்பதற்கு முன்பாக அந்த நபருடைய ஜாதகம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்த நபர் நம் குடும்பத்து உறுப்பினரோ அல்லது நண்பர்களாகவோ தான் இருக்க முடியும்.யார் ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாவது இடத்தில் சுக்கிர பகவான் பலம் பெற்று இருக்கிறாரோ அவர்களிடம் தான் நாம் பணத்தை பெற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ராசியிலும் சுக்கிர பகவான் இருப்பார் ஆனால் எல்லா ராசியிலும் அவர் பலம் பெற்று இருக்க மாட்டார். ஒரு சில ராசியில் பலம் குறைந்தும் ஒரு சிலர் ராசியில் நீச்சமடைந்தும் இருப்பார். அது போன்ற சமயங்களில் இந்த முறையை நீங்கள் முயற்சி செய்தால் பலிக்காது.
யார் ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர திசையானது நல்ல பலத்துடன் இருந்து அவர்களுக்கு சுக்கிர யோகம் இருக்கிறதோ அந்த நபருடைய கைகளில் இருந்து சுக்கிர ஹோரையில் நீங்கள் பணத்தை வாங்க வேண்டும். அது ஒரே ஒரு ரூபாயாக இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அந்த நபரின் கையில் இருந்து தான் பணத்தை வாங்க வேண்டும். இப்படி வாங்குவதால் அந்த நபருக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விடுமா என்று பயம் கொள்ள தேவையில்லை. அவர்களுடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் வலுவாக இருப்பதால் அவர்களுக்கு எந்த கேடும் நிகழாது.
இதை கொஞ்சம் ஜாதக விஷயம் தெரிந்தவர்கள் பின்பற்றுவது நல்லது அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களின் ஜாதகத்தை நீங்கள் அவ்வப் போது பார்த்து வந்தால் இந்த சுக்கிர திசை போன்றவற்றை சரியாகத் தெரிந்து கொண்டு அந்த நேரத்தை உங்களுடைய முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.