சென்னை: சட்டமன்ற தொகுதிவாரியாக அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க உள்ளார் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் என்று இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை, அதாவது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரை ஒன்றாக இணைக்கும் பணியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் வரும் ஜூலை 16 மற்றும் 21ம் தேதி வரை (மொத்தம் 6 நாள்கள்) சட்டமன்றத் தொகுதி வாரியாக அதிமுக தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அவரது தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், சசிகலா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் “அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.