பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உச்சி மாநாடு தொடங்கியது. பாரீஸ் நகரில் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் சிஇஓக்கள் பங்கேற்கின்றனர். பாரிஸில் நடைபெறவுள்ள மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடன் பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “AI தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கான வரைபடங்களை உருவாக்குகிறது. AI தொழில்நுட்பம் வரலாறு காணாத அளவில் வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Al) மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கப் பயன்படுகிறது.
அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு போன்றவற்றை மறுவடிவமைப்பதில் AI உதவுகிறது. AI தொழில்நுட்பம் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பாதுகாப்பான முறையில் AI “ஒவ்வொருவரும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். AI மூலம் விவசாயம் மற்றும் கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த முடியும்,” என்றார்.