சென்னை: கோவில்களில் சென்றால் விபூதி, குங்குமம் சாமிக்கு படைத்து பூசாரிகள் நமக்கு நெற்றியில் வைத்துக் கொள்ள கொடுப்பார்கள். ஏன் விபூதி, குங்குமம் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா?
என்னதான் ஆடை, அணிகலன்கள் போட்டு பெண்கள் தங்களை அலங்காரம் பண்ணிக்கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது.
எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் அல்ல. நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால்தான் நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கப்படுகிறது. நம் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாகவும் இது உள்ளது.