சென்னை: தமிழகத்தில் உள்ள குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது மற்றும் அதை நீட்டிப்பது தொடர்பான குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
தமிழகத்தில் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கால நீட்டிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகள் அரசு விதிகளின்படி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், இயற்கை வளத் துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் தலைவர் தீனபந்து, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சரவண வேல்ராஜ், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இயக்குநர் ராகுல்நாத் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.