சென்னை: திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருக்கு ஜாக்பாட் தான் போங்க. ஆமாங்க மாற்று கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கட்சியிலிருந்து திமுகவுக்கு வந்த 3 பேருக்கு மா.செ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் மா.செ.,க்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாஜலம் ஈரோடு மத்திய மாவட்ட மா.செ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் தேமுதிக தினேஷ் குமார், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கும், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த லட்சுமணன் விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கும் மா.செவாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது திமுகவில் உள்ளவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசியல் விமர்சனகளில் தெரிவிக்கின்றனர். எங்க காலமாக கட்சிக்கு பணியாற்றி வருபவர்களுக்கு பதவி வழங்கப்படாத நிலையில் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவது கட்சி நிர்வாகிகள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாம்.