மும்பை: இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாசாரத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
தனது இந்தி யூடியூப் சேனலில் இது குறித்து பேசியிருக்கும் அஸ்வின், “இந்திய கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்களை முதலில் சாதாரண நிலைக்கு கொண்டு வரவேண்டும். இந்திய அணியில் சூப்பர் ஸ்டார் வழக்கத்தை, பிரபலங்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது. நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் தானே தவிர, நடிகர்களோ சூப்பர் ஸ்டார்களோ அல்ல. நாம் விளையாட்டு வீரர்கள். சாதாரண மக்களை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள் நம்மைத் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடியவராக இருக்க நாம் வேண்டும்.” என்று கூறினார்.