கர்நாடகா: கர்நாடக காங்கிரஸில் தொடரும் குழப்பத்தால் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ராகுல் காந்தியும், மல்லிகாகார்ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில், பங்கேற்க காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், இருவரும் பங்கேற்கவில்லை. அம்மாநில துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தி வருகிறார். இதனால், ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க இருவரும் மாநாட்டை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் உள்ள குழப்பம் பொதுவெளியில் வெடிக்க கூடாது என்பதற்காக இருவரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.