கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணும் நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம். தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தது. தென்னிந்தியாவில் தங்கம் கையிருப்பில் தமிழகம் முன்னணியில் உள்ளது. மேலும் தமிழக பெண்கள் தங்க நகைகளை அதிகம் விரும்புவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.240 குறைந்து ரூ.54,160க்கு விற்பனையானது. அதேபோல், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,770 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி (ஜூலை 10) சென்னையில் 22 காரட் நகைகளின் விலை ரூ.80 குறைந்து ரூ.54,080 ஆக உள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 7,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்க சவரன் ரூ.57,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.99.00 ஆக உள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.94,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.