அம்மா என்றாலே யாருக்குதுனா பிடிக்காது என்பது போல அசைவம் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. நம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அசைவ பிரியர்கள் அதிகம். நம் நாட்டில் அசைவ உணவு உண்ணும் முதல் 5 மாநிலங்கள் எவை? இந்த பட்டியலில் காணலாம்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, 98.7 சதவீதம் அசைவ உணவு உண்பவர்களுடன் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 97.8%, அசாமில் 78.6%, டெல்லியில் 63.2%, உத்தரபிரதேசத்தில் 55%, ராஜஸ்தானில் 26.8%.
இதேபோல் லட்சத்தீவில் 98.4% ஆண்கள் அசைவம் சாப்பிடுபவர்கள். இது இந்தியாவிலேயே மிக உயர்ந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவுடன் ஒப்பிடும் போது லட்சத்தீவின் மக்கள் தொகை குறைவாக உள்ளது.
14.1% உடன், ராஜஸ்தான் இந்தப் பட்டியலில் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா ஆகியவை இந்தியாவில் சைவ உணவு உண்பவர்கள் குறைவாக உள்ள மாநிலங்களாக இடம் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, மிசோரம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. உணவுகள் பொதுவாக கலாச்சாரம் சார்ந்தவை மற்றும் ஒவ்வொரு மண்ணுக்கு ஏற்ப மாறுபடும்.
இந்தியாவில், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் கலாச்சார மற்றும் சமையல் விருப்பங்கள் காரணமாக அசைவ உணவு உண்பவர்களின் சதவீதம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் அசைவ உணவுகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை உண்கின்றனர். ராஜஸ்தான் போன்ற மேற்கத்திய மாநிலங்களில் அசைவ உணவு உண்பவர்களின் விகிதம் மிகக் குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.