சென்னை: கூட்டம் வரும், ஓட்டு விழுமா என்று விஜய் மீது நடிகர் கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கூட்டம் வரும், அது வாக்காக மாறுமா என்று விஜய்யை நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் சாடியுள்ளார். அரசியல் என்பது விஜய் நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல எனவும், அவரை எம்எல்ஏவாக, முதல்வராக மக்கள் தேர்வு செய்வார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களை, மக்களை நேரில் விஜய் சந்திப்பதில்லை, கார்ப்பரேட் கம்பெனி போல அரசியலை நடத்த விரும்புவதாகவும் கருணாஸ் விமர்சித்துள்ளார்.