தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,200 கன அடியாக குறைந்தது. கடந்த 20-ம் தேதி காலை அளவீட்டில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கனஅடி நீர் வரத்து பதிவானது. 21-ம் தேதி காலை வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று காலை அளவீட்டின் போது வினாடிக்கு 1,200 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 491 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 641 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 491 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 109.93 அடியாகவும், நீர் இருப்பு 78.30 டிஎம்சியாகவும் இருந்தது.