சென்னை : மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை. மொழி அடிப்படையில் நம் தேசத்தை பிளவுபடுத்த சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
நமது தேசத்தை மொழி அடிப்படையில் பிளவுப்படுத்த சில அரசியல் கட்சிகள் முயன்று வருவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கும்பமேளாவில் பங்கேற்க பிரயாக்ராஜ் சென்றிருக்கும் அவர், மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து பேசினார். இந்தியை திணிக்கவில்லை, ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்கும்படி தான் மும்மொழி கொள்கை வலியுறுத்துகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் தான் தேவையின்றி சர்ச்சையை ஏற்படுத்துகின்றன என்றார்.