சென்னை : முதல்வர் மருந்தகத்தில் 762 வகை மருந்துகள் விற்பனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 – 50% வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும்.
அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது.
குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.