தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா, புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா, விளையாட்டு விழா ஆகியவை நடந்தது.
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் செயல்பட்டு வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டுவிழா, விளையாட்டு விழா ஆகியவை நடந்தது.
நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் தலைமை வகித்து பேசினார். தொடர்ந்து பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டன. மேலும் மாணவிகளின் சிலம்பம் சுற்றுதல், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும் மாணவிகள் தங்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம், ஒன்றிய செயலாளர் தோ.அருளானந்தசாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், திமுக நகரச் செயலாளர் டி.கே.எஸ்.ஜி.கல்யாணசுந்தரம், பேரூராட்சி கவுன்சிலர் சிங்.அன்பழகன், மாணிக்கம், சேகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.