சமீப காலமாக இந்திய வாகன சந்தையில் எஸ்யூவி கார்களின் பிரபலத்தால் செடான் கார்களின் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 2025 ஜனவரி மாதம் மொத்தம் 32,332 செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 ஜனவரி மாதத்திலிருந்து 1,519 யூனிட்கள் குறைவாகும்.
இந்த விற்பனை பட்டியலில், வழக்கம்போல மாருதி சுஸுகி டிசைர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 15,383 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 16,733 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 1,350 யூனிட்கள் குறைந்துள்ளது. ஆனாலும், இந்தியாவில் விற்பனையான மொத்த செடான் கார்களில் பாதி டிசைர் மாடலே ஆகும்.
இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் அவ்ரா 5,388 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 128 யூனிட்கள் குறைவாக உள்ளது. ஹோண்டா அமேஸ் 3,591 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதற்கடுத்த இடங்களில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (1,795 யூனிட்கள்), ஸ்கோடா ஸ்லாவியா (1,510 யூனிட்கள்), டாடா டிகோர் (1,484 யூனிட்கள்), ஹூண்டாய் வெர்னா (1,477 யூனிட்கள்) உள்ளிட்ட மாடல்கள் உள்ளன. மாருதி சுஸுகி சியாஸ் (768) மற்றும் ஹோண்டா சிட்டி (739) முறையே எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன.
இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்த டொயோட்டா காம்ரி, கடந்த மாதம் 197 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை, இந்திய சந்தையில் செடான் கார்கள் குறைந்த விற்பனை பெற்றாலும், மாருதி டிசைர் இன்னும் கட்டிக்கொண்டே போகும் என்பது உறுதி.